ஆரம்பமாகியது உலக கிண்ண ஹொக்கிப் போட்டி

14 ஆவது உலக கிண்ண ஹொக்கிப் போட்டி இந்தியாவின் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கு பற்றுகின்றன. 16 அணிகளும் தலா 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதில் குழு ‘ஏ’ யில் ஆர்ஜன்டீனா, நியூஸிலாந்து, ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸ் அணிகளும், குழு ‘பி’யில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் சீனாவும், குழு ‘சீ’ யில் இந்தியா, பெல்ஜியம், கனடா, தென்னாபிரிக்காவும், குழு ‘டீ’ யில் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இத் தொடர்நில் நேற்று நடைபெற்ற ஆரம்ப போட்டியில் ‘சி’ பிரிவில் உள்ள இந்தியா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

அத்துடன் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற மற்றுமோர் ஆட்டத்தில் பெல்ஜியம் கனடாவை எதிர்கொண்டாடியது. இதில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வெற்றிகொண்டாது.

இந் நிலையில் இரண்டாவது நாளான இன்று இரு போட்டிகள் இடம்பெறவுள்ளது. குழு ‘ஏ’ யில் அர்ஜன்டீனா -ஸ்பெயின் அணிகளுக்கும், பிரான்ஸ் – நியூஸிலாந்து அணிகளுக்கும் இடையில் ஆட்டம் இடம்பெறும்