65 பேர் உதவி பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு

தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் உதவி பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது

பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின் போரிலேயே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றின் போது இவர்களில் 48 பேர் வழங்கிய ஒத்துழைப்பினை கருத்திற் கொண்டே உதவி பொலிஸ் அதிகாரிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 2014 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கான நேர்காணலம் பரீட்சையில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மேலும் 17 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.