23 வருடங்களுக்கு பிறகு ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில்

தமிழ் சினிமா உலகில் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்த பின்னும் ரஜினியின் படங்களில் ஒரே ஆண்டில் 7-8 வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த 1995ல் பாட்ஷா படத்துக்கு பின்  ரஜினியின் படம் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும். இந்நிலையில் கடந்த 2014ல்  ரஜினியின் கோச்சடையான், லிங்கா படங்கள் வெளியானது.

23 வருஷத்துக்கு பின்…..
இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் ஒரே ஆண்டில் ரஜினியின் மூன்று படங்கள் முதல் முறையாக வெளியாக உள்ளதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் காலா படம் வெளியானது, நாளை 2.0 படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் பேட்ட படம் பொங்களுக்கு ரிலீசாகவுள்ளது. 12 மாதத்துக்குள் ரஜினியின் நடிப்பில் 3 படங்கள் வெளியாவதால், அவரது ரசிகர்கள் படுகுஷியில் உள்ளனர்.

குறிப்பாக ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றிக்கூட்டணியில் உருவாகி நாளை வெளியாகும் 2.0 படம் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பு மத்தியிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.