யாழில் ஆவா குழு முக்கிய காவாலி நீதிமன்றில் சரண்!

ஆவா குழுவை சேர்ந்தவர் என கூறி பொலிசாரால் தேடப்பட்டு வந்த அசோக் எனும் நபர் தனது சட்டத்தரணி ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் புதன் கிழமை சரணடைந்துள்ளார்.

மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் குறித்த நபர் பொலிசாரினால் தேடப்பட்டு வந்தார்.

இதேவேளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் குறித்த நபரின் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சில காலமாக தலைமறைவாக இருந்தவர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்