யாழ் கொழும்பு பேரூந்தில் மூடைப்பூச்சி கடி அதை முறையிட்ட பயணிக்கு தூஷணவார்த்தைப்பிரயோகம்..

யாழ்ப்பாணம்-கொழும்பு சொகுசு போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில் நேற்றைய தினம் முகஞ்சுழிக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

யாழிலிருந்து இரவு பத்து மணிக்கு புறப்பட்ட குறித்த பேருந்தில் பயணிகளை மூட்டைப் பூச்சிகள் பதம்பார்க்கத்தொடங்கியுள்ளன.

இதுதொடர்பில் குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் பேருந்து உரிமையாளருக்கு முறையிடுவதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டபோது குறித்த உரிமையாளர் பயணிகளை மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டித் தீர்த்துள்ளார்.

தவிர குறித்த பயணியை ஏசும்போது அவரது அம்மாவையும் மிக அநாகரிகமான தூஷண வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதேவேளை சில மாதத்துக்கு முன்னர் கொழும்பிலிருந்து பயணித்த பிறிதோர் பயணி குறித்த பேருந்தில் ஆசன முற்பதிவு செய்தபோதும் தனக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தை வேறோர் நபருக்கு கொடுத்தது மாத்திரமன்றி அதனைத் தட்டிக்கேட்டபோது பேருந்து சாரதியும் நடத்துநரும் கடும் அச்சுறுத்தல் விடுத்ததாக தனது முக நூலில் பதிந்திருந்தார்.

நேற்றைய தினம் பேசிய நபரும் தனக்கு அமைச்சர் ஒருவரின் செல்வாக்கு இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளமை காணொளியில் பதிவாகிய குரல்பேச்சின்மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான காணொளியும் புகைப்படங்களும் பாதிக்கப்பட்டோரால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.


வீடியோ இணைப்பு

https://youtu.be/bseW3dCNsp8