ஸ்ரீ லங்கா போலீஸ்சாரின் கடும் கெடுபிடிக்குமத்திஜிலும் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இன்று வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கும், போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்த இடத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், துயிலுமில்லம் முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளன.