மாவீரர் நினைவேந்தலுக்கு- தாயகம் தயார்

ஆயு­தப் போர் மௌனிக்­கப்­பட்ட பின்­னர் கடந்த ஆண்டு மாவீ­ரர் நாள் மிக எழுச்­சி­யு­டன் நினை­வேந்­தப்­பட்­டது. இந்த ஆண்­டும் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தலை உணர்­வெ­ழுச்­சி­யு­டன் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் சிவப்பு – மஞ்­சள் கொடி­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. நினை­வேந்­து­வ­தற்­காக ஏற்­பா­டு­கள் சிறப்­பான முறை­யில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பிற்­ப­கல் 6.05 மணிக்கு ஈகச் சுடர் ஏற்­றப்­பட்டு மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

உடுத்­துறை
உடுத்­துறை மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் மாவீ­ரர் நினை­வேந்­த­லுக்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளும் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன என்று ஏற்­பாட்­டுக் குழு தெரி­வித்­துள்­ளது. மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர்­கள் மற்­றும் உற­வு­க­ளின் போக்­கு­வ­ரத்­துக்­கான பயண ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்­றும் அறி­வித்­துள்­ளது.

பருத்­தித்­து­றை­யி­ருந்து 2 மணிக்கு புறப்­ப­டும் பேருந்து மந்­திகை – வல்­லி­பு­ரம் – அம்­பன் ஊடாக உடுத்­திறை மாவீ­ரர் துயி­லும் இல்­லம் வந்­த­டை­யும் என்­றும் கேவி­லி­லி­ருந்து பி.ப. 3 மணிக்குப் புறப்­ப­டும் பேருந்து கட்­டைக்­காடு வெற்­றி­லைக்­கேணி ஊடா­கத் துயி­லு­மில்­லம் வந்­த­டை­யும். வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்­கா­கப் புதுக்­காடுச் சந்­தி­யி­லி­ருந்து மரு­தங்­கேணி ஊடாக துயி­லு­மில்­லம் வரை போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தீரு­வில்
தீரு­வில் மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் நினை­வேந்­த­லுக்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளும் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. கடந்த காலங்­க­ளைப் போன்று அங்கு நினை­வேந்­தல் நடை­பெ­றும் என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

யாழ்.பல்­கலைக்கழகம்
யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக வளா­கத்­தில் உள்ள மாவீ­ரர் நினை­வுத் தூபி சீர­மைக்­கப் பட்டு புதுப்­பொ­லி­வு­டன் மாவீ­ரர் நினை­வேந்­த­ லுக்­குத் தயார்ப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மாவீ­ரர் நாள் நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் நிறைவு செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில் நினை­வேந்­தல் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சாட்டி
தீவ­கம், சாட்டி மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் நினை­வேந்­த­லுக்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளும் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. மாவீ­ரர்­களை நினை­வேந்த அனை­வ­ருக்­கும் ஏற்­பாட்­டா­ளர்­கள் அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

கோப்­பாய்
கோப்­பாய் இரா­ச­வீ­தி­யில் மாவீ­ரர் நினை­வேந்­தல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. கோப்­பாய் மாவீ­ரர் துயி­லும் இல்­லம் இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் உள்ள நிலை­யில் துயி­லும் இல்­லத்­துக்கு முன்­பாக உள்ள பகு­தி­யில் நினை­வேந்­த­லுக்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளும் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. கடந்த காலங்­க­ளில் நடை­பெற்­ற­தைப் போன்று மாவீ­ரர்­நாள் இன்று அங்கு நடை­பெ­றும் என்று ஏற்­பாட்­ட­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

கிளி­நொச்­சி
கிளி­நொச்சி, கன­கபு­ரம் முழுங்­கா­வில் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்க­ளில் மாவீ­ரர் நாள் நினை­வேந்­த­லுக்­குச் சிறப்­பான முறை­யில் தயார் செய்­யப்­பட்­டுள்­ளன. அனைத்­துத் தரப்­பி­ன­ரும் இணைந்து இந்த ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

எந்­த­வித நெருக்­க­டி­க­ளும் இன்றி மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் ஏற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப் பட்­டுள்­ளன என்­றும், நினை­வேந்­த­லில் அனை­ வ­ரும் கலந்து கொண்டு மாவீர்­களை உணர்­வெ­ழுச்­சி­யு­டன் அஞ்­ச­லிப்­போம் என்றும் கன­க­பு­ரம் மாவீ­ரர் பணிக்­கு­ழுச் செய­லா­ளர் குமா­ர­சிங்­கம் தெரி­வித்­தார்.

முல்­லை­த்­தீ­வு
அளம்­பில் தேவி­பு­ரம், முள்­ளி­வாய்க்­கால், இர­ணைப்­பா­லை துயி­லும் இல்­லங்க­ள­ில் மாவீ­ரர் நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. அந்­தப் பகுதி இளை­ஞர்­கள், உற­வி­னர்­கள், ஏற்­பாட்டுக் குழு­வி­னர் இணைந்து நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

கஞ்­சி­கு­டிச்­சாறு
அம்­பாறை, கஞ்­சி­கு­டிச்­சாறு மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் மாவீ­ரர் நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் நிறைவு பெற்­றுள்­ளன. போக்­கு­வ­ரத்து, குடி தண்­ணீர், உணவு போன்ற அனைத்து ஏற்­பா­டு­க­ளும் மாவீ­ரர் பணிக்­கு­ழு­வால் முற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அனை­வ­ரும் கலந்து கொண்டு மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த வேண்­டும் என்று பணிக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது.

ஏனைய மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளி­லும் நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­கள் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. ஆல­யங்­க­ளி­லும் சிறப்பு வழி­பா­டு­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன