சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் அஞ்சலி

தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் இன்று மாலை 6;05இற்கு மணியொலி எழுப்பப்பட்டதுடன் அகவணக்கத்தை தொடர்ந்து சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தின் பிரதான சுடரை இரண்டு மாவீரர்களின் தந்தையாரான திரு சின்னத்துரை சந்திரசேகரம் அவர்களல் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்மற்றும் உறவுகள் நண்பர்கள் மதகுருமார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பாராளூமன்றத்தின் (தமிழரசுக்கட்சி ) உறுப்பினர் திரு சரவணவவன் அவர்கள் உட்பட பலரும் ஏற்றி நினைவேந்தல் செய்தனர்.இதன் போது துயிலுமில்ல பாடல் ஒலித்தது.
சமநேரத்தில் கடலில் வீரகாவியமான வீரமறவர்களுக்கு சாட்டி கடலில் கப்பல் வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்த பீடத்தின் பிரதான சுடரை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றிவைக்க கடற்கரையில் அமைக்கப்பட்ட ஏனைய சுடர்களை மாவீரர்களின் உறவுகள் ஏற்றினார்கள்
இவ்வாண்டு இங்கு ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்து ஈகைச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்