2.4 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூவர் கைது

2.4 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகளை டுபாயிலிருந்து கடத்தி வந்த மூவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 17,18 மற்றும் 31 வயதுடைய காலி, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

டுபாய் சாஜாவிலிருந்து இன்று காலை 6 மணியளவில் இலங்கை வந்த விமானத்தில் வந்திருந்த மூவரும், தமது பயணப் பொதியில் மறைத்து வைத்து சிகரெட்டுக்களை கடத்த முயற்சிக்கையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அதன்படி இவர்களிடமிருந்து 49,800 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி 2,490,000 எனவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.