ஜனநாயகம் மீறப்பட்டமையை நிரூபிக்கவே வழக்குத் தாக்கல்- சரவணபவன் எம்.பி

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­வ­ப­வன் தெரி­வித்­தார்.

தற்­போ­தைய அர­சி­யல் நிலைமை தொடர்­பா­கக் கோப்­பாய் பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட பொது அமைப்­புக்­க­ளு­டன் நேற்று அவர் நடந்­திய சந்­திப்­பி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-

நாம் கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையோ, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையோ விரும்பி வாக்­க­ளிக்­க­வில்லை. மகிந்த வேண்­டாம் என்றே வாக்­க­ளித்­தோம். கூட்­ட­ர­சின் ஆட்­சி­யில் தமிழ் மக்­கள் சிறிது மூச்சு விட்­ட­னர் என்­பது உண்மை.

கூட்­ட­ரசு உடை­யாது இருந்­தி­ருந்­தால் அர­ச­மைப்பை முழு­மை­யாக நிறை­வேற்­றி­யி­ருக்க முடி­யும். துர­திர்ஸ்­வ­ச­மாக அவர்­க­ளின் ஒற்­றுமை நிலைக்­க­வில்லை. அவர்­க­ளி­டையே கருத்து முரண்­பா­டு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

மீண்­டும் முன்­னைய காலம்­போன்ற இறுக்­க­மான நிலைமை தோன்­ற­லாம். பெரும்­பான்மை அர­சில் எந்­தப் பிரச்­சினை வந்­தா­லும் முதல் பாதிக்­கப்­ப­டு­வதே சிறு­பான்மை இன மக்­களே.

அதி­லும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களே அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வர். அரச தலை­வ­ரின் பணிப்­பின்­பே­ரில் ஞான­சார தேர­ரின் வழக்­கு­கள் மீளப் பெறப்­ப­டு­கின்­றன. ஆனால் தமி­ழர் பகு­தி­க­ளில் இலச்­சி­னை­க­ளைப் பாவிக்­கக் கூடாது என்று சட்­டம் உத்­த­ர­வி­டு­கின்­றது.

தற்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­க­ளிப்பு என்ன?, அது தேவை­தானா என்ற கேள்­வி­கள் பல­ரி­டம் எழுந்­துள்­ளன. திருட்­டுத் தலைமை அமைச்­சர், அமைச்­சர்­கள் செயற்­ப­டு­கின்­ற­னர். அதைத் தொடர விடக் கூடாது என்­பதே எமது நிலைப்­பாடு. அதற்­கா­கவே அந்த அரசை எதிர்த்து வாக்­க­ளித்­தோம். அது நாம் ரணி­லுக்கு ஆத­ரவு என்று அர்த்­தப்­ப­டாது.

கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­கள் கையொப்­பம் இட்­டுச் சத்­தி­யக் கட­தாசி கொடுத்­தமை வழக்கு நட­வ­டிக்­கைக்­கா­கவே. மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் சில நடை­மு­றை­கள் உள்­ளன. அதற்கு அமை­யவே சத்­தி­யக் கட­தா­சி­கள் வழங்­கப்­பட்­டன. அப்­போ­தும் கூட்­ட­மைப்­புத் தலை­வர் உட்­பட 14 உறுப்­பி­னர்­க­ளும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு கொடுப்­ப­தில்லை என்ற தீர்­மா­னத்­து­டனே ஒப்­ப­மிட்­டோம். நீதி­மன்று ஊடாக நீதி கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் உள்­ளோம்.

மகிந்த தரப்­பி­னர் நிதி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தைத் தடுக்­கக் கோரி பிரே­ரணை நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அரச தலை­வர் நாடா­ளு­மன்­றக் கலைப்­புத் தொடர்­பாக வெளி­யிட்ட அர­சி­தழை மீளப் பெறக் கூடிய சாத்­தி­ய­மும் உள்­ளது.

எமது கட்­சிக் கூட்­டத்­தில் உறுப்­பி­னர்­கள் இடையே பல கருத்­துக்­கள், வியாக்­கி­யா­னங்­கள் இருக்­கும். கருத்து மோதல்­கள் கூட ஏற்­பட்­டி­ருக்­க­லாம். ஆனால் நாம் கொள்­கை­ரீ­தி­யில் இணைந்து மக்­க­ளுக்­கா­கச் செயற்­ப­டு­வோம். தற்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளில் எமது உறுப்­பி­னர்­க­ளின் ஒற்­று­மை­யைக் கண்டு தென்­னி­லங்கை வியந்­தது. அத­னால் எமக்கு மதிப்­புக் கொடுத்­த­னர். அதே ஒன்­று­மை­யு­டன் நாம் மக்­கள் நலன் சார்ந்து தீர்­மா­னம் எடுப்­போம்.- என்­றார்