க.பொ.த. சாதாரண தர வகுப்புகளை நடத்த தடை

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.