எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்

மாவீரர் நாளுக்கான எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் ..

நாளைய தினம் 2018 ம் ஆண்டுக்கான மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்காக வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் மிகவும் எழுச்சியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலத்தில் எவ்வாறு கொண்டாடப்பட்டதோ அதேபோல இவ்வருடமும் இப்பிரதேச இளைஞர்கள் ஒன்று திரண்டு பல அச்சுறுத்தல்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

இவ்வருடமும் மாவீரர் தின நிகழ்வுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்கு புதுக்காடு, மற்றும் கேவில் மணற்காடு பகுதியில் இருந்து வருவதற்கான பேருந்து வசதிகளும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வளவு காலமும் இடம்பெற்று வராதிருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு அடுத்த வருடம் முதல் இடம்பெறுவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ள உள்ளனர் எனவும் அறிய முடிகிறது.