மகிந்த அணி­யின் வரவு – செல­வுத் திட்­டம் தோற்­க­டிப்பு!!

சிறி­லங்கா பொது மக்கள் முன்­ன­ணி­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள சீதா­வாக்­க­புர நகர சபை­யின் வரவு – செல­வுத் திட்­டம் நேற்­று­முன்­தி­னம் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

சீதா­வாக்­க­புர நகர சபை­யில், பொது­ மக்கள் முன்­ன­ணிக்கு 11 ஆச­னங்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு 11 ஆச­னங்­க­ளும், ஜே.வி.பிக்கு ஒரு ஆச­ன­மும் உள்­ளன.

அங்கு ஆட்­சி­ய­மைத்­துள்ள பொது­மக்கள் முன்­ன­ணி­யின் சார்­பில் நிய­மிக்­கப்­பட்ட நகர சபைத் தலை­வர் ரண­வீர நேற்று 2019ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்தை முன்­வைத்­தார்.

வரவு – செல­வுத் திட்­டம் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்ட போது, சிறி­லங்கா பொது­ஜன முன்­ன­ணி ­யின் 11 உறுப்­பி­னர்­கள் ஆத­ர­வா­க­வும், ஐ.தே.க. மற்­றும் ஜே.வி.பி. உறுப்­பி­னர்­கள் 12 பேர் எதி­ரா­க­வும் வாக்­க­ளித்து வரவு – செல­வுத் திட்­டத்தை தோற்­க­டித்­த­னர்.

கொழும்பு அர­சி­யல் குழப்­பங் கள் தற்­போது உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­லும் எதி­ரொ­லிக்­கத் தொடங்­கி­யி­ருப்­ப­தைச் இந்­தச் சம்­ப­வம் எடுத்­துக் காட்­டு­கின்­றது என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் கூறு­கின்­ற­னர்.