தடைசெய்யப்பட்ட வாள் வைத்திருந்த மூவருக்கு மறியல்!!

சாவகச்சேரி, நவ. 25தடை செய்யப்பட்ட வாள்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் மூவரை விளக்க மறியலில் வைக்குமாறு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது சாவகச்சேரி நீதிமன்றம்.

சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி உதயசூரியன் கிராமத்தில் மேற்கொண்ட சோதனையின் போது தடை செய்யப்பட்ட வாள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரைக் கைது செய்து நேற்றுமுன்தினம் நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மூவரையும் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.