தடைகளைத் தகர்த்து – மாவீரர் நாளை தமிழ் மக்கள் கடைப்பிடிப்பர்- சம்­பந்­தன் நம்­பிக்கை!!

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்­கம் 2015ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தி­க­ளில், ஆட்­சி­யா­ளர்­க­ளால் பல்­வேறு அழுத்­தங்­கள் –- நெருக்­கு­தல்­கள் –- அச்­சு­றுத்­தல்­கள் விடுக்­கப்­பட்­ட­போ­தும் அத்­தனை தடை­ க­ளை­யும் தகர்த்­தெ­றிந்து, தமிழ் மக்­கள், பல்­க­லைக் கழக மாண­வர்­கள் மாவீ­ரர் நாளை உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டித்­தார்­கள்.

இந்த ஆண்­டும் எத்­த­கைய தடை­கள் வந்­தா­லும் அதை உடைத்­தெ­றிந்து மாவீ­ரர் நாளை மக்­கள் நினை­வு­கூ­ரு­வார்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசத்­தின் விடி­வுக்­காக, தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­காக தமது இன்­னு­யிர்­களை உவர்ந்­த­ளித்து – வீரச்­சாவை அணைத்­துக் கொண்ட வீர­ம­ற­வர்­களை – மாவீ­ரர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் வாரம் தமி­ழர் தாய­கம் எங்­கும் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இத­னைத் தடுக்­கும் நோக்­கு­டன் கோப்­பாய் பொலி­ஸா­ரால், கோப்­பாய் மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­துக்கு முன்­பாக உள்ள காணி­யில் மாவீ­ரர் நாள் நினை­வு­க­ளைக் கடைப்­பி­டிப்­பதை தடை செய்­யக் கோரி வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. மாவீ­ரர் நாள் நினை­வேந்­தலை நடத்­து­வ­தற்கு மன்று தடை விதிக்­க­வில்லை. தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் சின்­னங்­கள், கொடி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை விதித்­தி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், அரச தக­வல் பணிப்­பா­ளர் நாய­கத்­தி­னால் நேற்று சிறப்பு ஊடக அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. ‘மாவீ­ரர் நினைவு தின கொண்­டாட்­டங்­கள் தொடர்­பாக எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் அரசு அனு­மதி வழங்­க­வில்லை.

அவ்­வாறு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது என்று உண­ரும் வகை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் பரப்­பு­ரை­க­ளில் எவ்­வித உண்­மை­யும் இல்லை என்­ப­தை­யும் அரசு வலி­யு­றுத்­து­கின்­றது’ என்று அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டம் கேட்­ட­போது, நாங்­கள் எங்­கள் உற­வு­களை நினை­வு­கூ­ரு­வோம்.

2009ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றம் வரை­யில், மாவீ­ரர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. பல்­வேறு தடை­க­ளும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. தமிழ் மக்­க­ளும், பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளும் அந்­தத் தடை­க­ளைத் தகர்த்து மாவீ­ரர்­நாளை நினை­வு­கூர்ந்­த­னர்.

ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளும், மாவீ­ரர் நாள் சுதந்­தி­ர­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. மாவீ­ரர் நாளுக்கு தடை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மாக இருந்­தால், தமிழ் மக்­கள் அத­னைத் தகர்த்­தெ­றிந்து உணர்­வு­பூர்­வ­மா­கக் கடைப்­பி­டிப்­பார்­கள் – என்­றார்.