ஜம்மு -காஷ்மீரில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு -காஷ்மீரில் இந்திய இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

ஜம்மு- காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் ஹிபுரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இந்திய இராணுவத்தினர் அப் பகுதியல் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், பதிலுக்கு இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற இத் தாக்குதலில் நான்கு தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் குழுக்களில் உள்ள நான்குபேர்தான் இவர்கள் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.