கடுகதித் தொட­ருந்து மோதி -முதி­ய­வர் உடல் சிதறிச் சாவு!!

கிளிநொச்சி பளை முக­மா­லைப் பகு­தி­யில் தொட­ருந்து மோதி 60 வயது முதி­ய­வர் நேற்று உயி­ரி­ழந்­துள்­ளார்.

சுழி­பு­ரத்­தைச் சேர்ந்த சுப்­பி­ர­ம­ணி­யம் குண­சீ­லன் என்­ப­வரே தொட­ருந்து மோதி உயி­ரி­ழந்­த­வர் என்று பளைப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணம் நோக்கி வந்த கடு­கதி தொட­ருந்து முக­மா­லையை அண்­மித்த போது சாலை­யோ­ரம் நின்ற இந்த நபர் திடீ­ரென தண்­ட­வா­ளத்­தி­னுள் ஏறி­ய­போது தொட­ருந்து மோதி, உடல் சின்­னா­பின்­னா­மா­கி­யது என்று சம்­ப­வத்தை நேரில் கண்ட தொட­ருந்­துக் கட­வைக் காவ­லாளி தெரி­வித்­தார்.

சுழி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் எனக் கூறி கடந்த இரு தினங்­க­ளாக முக­மாலை பேருந்து தரிப்­பி­டத்­தில் தங்­கி­யி­ருந்­த­தா­க­வும் முக­மா­லை­யில் உள்ள காணி­யைக் காட்­டு­வ­தற்கு ஒரு­வர் வர­வேண்­டு­மெ­னக் கூறி­யுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த நபர் வைத்­தி­ருந்த கைப்­பை­யி­னுள் பணம், காணி உறுதி மற்­றும் கட­வுச்­சீட்டு போன்­றவை காணப்­பட்­ட­தெ­ன­வும் அவற்­றைப் பளைப் பொலி­ஸார் எடுத்­துச் சென்­றுள்­ள­னர் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.