இடப்­பெ­யர்வு வாழ்­வை­விட மோசமான வாழ்வு -தையிட்டி மக்­கள் கடும் வேதனை

போரால் இடம்­பெ­யர்ந்து யாழ்ப்­பா­ணத்­தின் பல்­வேறு நலன்­புரி நிலைங்­க­ளி­லும் வசித்­த­வர்­க­ளில், தமது சொந்­தக் காணி­கள் இன்­னும் விடு­விக்­கப் படா­த­வர்­க­ளும் சொந்த ஊரில் காணி­கள் இல்­லா­த­வர்­க­ளுமே இவ்­வாறு தையிட்டி தெற்கு கிராம சேவ­கர் பிரி­வில் மீள் குடி­யேற்­றப்­பட்­ட­னர். தாம் மீளக்கு­டி­யேற் றப்­பட்ட பின்­னர் தமக்­கு­ரிய எந்த அடிப்­படை வசதி­க­ளும் உரிய வகை­யில் செய்து தரப்­ப­ட­வில்லை என்று அவர்­கள் ஆதங்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இந்த விட­யம் தொடர்­பில் தையிட்டி தெற்­குப் பிர­தேச வாசி­கள் உத­ய­னுக்­குத் தெரி­வித்­த­தா­வது:

மீள் குடி­யேற்ற அமைச்­சின் நிதி­யி­லி­ருந்து நாற்­பது பேருக்­கும் சுமார் இரண்டு பரப்பு காணி­கள் கொள்­வ­னவு செய்துதரப்படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் எமக்கு ஒன்­ற­ரைப் பரப்பு காணி­கள் வரையே வழங்­கப்­பட்­டன. மிகு­திப் பணத்­துக்கு ஜன்­னல்­க­ளும் நிலை­க­ளுமே வழங்­கப்­பட்­டன. இதில் பல்­வேறு மோச­டி­கள் இடம்­பெற்று இருக்­க­லாம். இந்த விட­யத்­தில் மரக்­காலை உரி­மை­யா­ள­ரும் அர­சி­யல் வாதி­யொ­ரு­வ­ரும் தொடர்பு பட்­டி­ருக்­க­லாம் என்று சந்­தே­கம் கொள்­கின்­றோம்.

எமக்கு அமைத்­துத் தரப்­பட்ட வீடு­கள், மல­சல கூடங்­கள் என்­ப­வற்­றில் தாழி­றக்­கம் அதா­வது வெடிப்பு ஏற்­ப­டு­வ­தால் இருந்த இட­மும் இன்­றி­யும் புதிய இடத்­தி­லும் வசிக்க முடி­யா­ம­லும் அவ­திப்­ப­டு­கின்­றோம். நான்கு வீடு­க­ளுக்கு ஒரு குழாய்­கி­ணறு வீதம் அமைத்­துத் தரப்­பட்­டது. ஆனால் அவற்­றில் ஒன்­றி­லி­ருந்து கூட தண்­ணீர் பெற்­றுக் கொள்ள முடி­யா­மல் உள்­ளது. தற்­போது ஒரு கிலோ மீற்­ற­ருக்கு அதி­க­மான தூரம் நடந்து சென்று குடி­தண்­ணீர் பெறு­கின்­றோம். பிர­தேச சபை­யால் எமக்கு வழங்­கப்­ப­டும் தண்­ணீர் போது­மா­ன­தாக இல்லை. ஆக, குறைந்த பட்­சம் தண்­ணீர் வளம்­கூட அற்ற பகு­தி­யாக இந்­தப் பகுதி உள்­ளது.

36 வீடு­கள் அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டன. ஒரு வீடு­கூட முழு­மை­யா­கக் கட்டி முடிக்­கப்­ப­ட­ வில்லை. வீடு­க­ளுக்­கான பாதை­கள், பொதுப்­பா­தை­கள் உரிய முறை­யில் திட்­ட­மி­டப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. வீடு­களில் பற்றை மண்­டிக் கிடக்­கின்­றன. பாதை­க­ளில் கால்­வைத்­தால் கணுக்­கால் வரைக்கும் மேல் புதை­யுண்டு போகக்­கூ­டிய வகை­யில் இருக்­கும் மிக­வும் மோச­மான பாதை­க­ளால் நாம் எவ்­வாறு பய­ணம் செய்­வது? எவ்­வாறு எமது பிள்­ளை­கள் பாட­சா­லைக்­குச் செல்­வது? எவ்­வாறு வயோ­தி­பர்­கள் நட­மா­டு­வது? போக்­கு­வ­ரத்­துக்­கு­ரிய மார்க்­கம் இல்­லா­த­தால் ஏரா­ள­மான குடும்­பங்­கள் இங்கு மீள்­கு­டி­யேறப் பின்­ன­டிக்­கின்­றன. எமக்­கு­ரிய அரச அலு­வ­லர்­கள், மக்­கள் பிர­தி­நி­தி­கள் எமது விட­யத்­தில் தமது உயர் கவ­னத்­தைக் கொண்­டு­வந்து உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள வேண்­டும். நாம் குறைந்­த­பட்ச வச­தி­க­ளு­ட­னா­வது வாழ்­வா­தற்கு ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்­டும் – என்று தெரி­வித்­த­னர்.

தவி­சா­ள­ரின் பதில்
இந்த விட­யம் தொடர்­பில் வலி­கா­மம் வடக்கு தவி­சா­ள­ரைத் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது அவர் தெரி­வித்­த­தா­வது: 
தையிட்டி தெற்கு பிர­தேச மக்­க­ளின் விட­யம் தொடர்­பில் பிர­தேச செய­ல­ருக்கு அறி­வித்­துள்­ளோம். குடி­தண்­ணீர் வச­தி­கள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்­தப் பகு­தி­யில் சிறந்த வீதி­கள் அமைக்க ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஏனைய விட­யங்­க­ளும் கவ­னத்­தில் கொண்டு செயற்­ப­டுத்­தப்­ப­டும் – –என்­றார்.