அட்­மி­ரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்னவுக்கு- குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­க­ளம் அழைப்பு!!

முப்­ப­டை­க­ளின் பிர­தானி அட்­மி­ரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்று அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் 27ஆம் திகதி காலை 10 மணிக்கு குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்று அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள் ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

2008ஆம் மற்­றும் 2009ஆம் ஆண்­டுக் காலப்­ப­கு­தி­யில், 11 இளை­ஞர்­கள் கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் சந்­தேக நப­ரான சந்­தன பிர­சாத் ஹெட்­டி­யா­ராச்சி என்­ப­வ­ருக்கு அடைக்­க­லம் வழங்­கி­னார் என்று ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­தக் குற்­றச்­சாட்டு தொடர்­பில் வாக்­கு­மூ­லம் ஒன்­றைப் பெற்­றுக்­கொள்­ளும் நோக்­கி­லேயே புல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்று அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்கு முன்­ன­ரும் குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்று அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட போதி­லும் பணி நிமித்­தம் வௌிநாடு சென்­றி­ருந்­த­தால் அவர் அங்கு முன்­னி­லை­யா­க­வில்லை.