7 உயிர்களைப் பலிவாங்கிய கிரிக்கெட் மோதல்

பாகிஸ்தானில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து ஏற்பட்ட  மோதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

பாகிஸ்தானில் வன்முறைகள் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் நேற்று சிறுவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கிரிக்கெட் விளையாடியபோது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை அவர்களின் பெற்றோர்களின் காதுக்கு எட்ட, அவர்கள் காவல் உதவி மையம் அருகே திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் வெடித்தது.

அப்போது இரு தரப்பினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்திக் கொண்டத்தில்  7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுாடு ஒருவர் பலத்த காயமடைந்தார்.

காவல் உதவி மையம் அருகில் மேற்கொண்ட குறித்த  மோதல் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.