மணல் அகழ்வு முயற்சி முறியடிப்பு!

தென்மராட்சி – மறவன்புலோ பகுதியில் சட்டவிரோதமான முறையில்  மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றமுன்தினம் காலை சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைத்த நிலையில் மறவன்புலே கடற்கரைப் பகுதிக்குச் சென்ற பொலிஸார் உழவு இயத்திரத்தினையும் இளைஞன் ஒவருவரையும் கைது செய்தனர்.

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.