விபத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிளில் மோதுண்டு ஒன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதுரலிய – மோல்கா பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அயலவர் ஒருவருடன் வீதியை கடக்க முற்பட்ட போதே உந்துருளியில் குழந்தை மோதுண்டுள்ளது.

இந்தச் சம்பம் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.