யுத்தகாலங்களில் கிளிநொச்சி செல்வதைப் போன்றே பாராளுமன்றுக்குள் செல்ல வேண்டியதாக உள்ளது

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போதும், தெரிவுக்குழு விடயத்திலும் ரணில் விக்கிரமசிங்க தரப்பிற்கு ஆதரவாக வாக்களித்த 15பேரைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 6பேரைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது.

எனவே தெரிவுக்குழுவில் ஆம் என்று வாக்களித்த 121 பேரில் 21 பேர் விலகும் போது அவர்களுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை 100ஆக அமையும். தற்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு 103 பேர் உள்ளனர்.

எனவே பெரும்பான்மை எம்மிடமே உள்ளது என  ரோஹித அபேகுணவர்தன எம்.பி. தெரிவித்தார்.

யுத்தகாலங்களில் கிளிநொச்சி செல்வதைப் போன்றே தற்போது பாராளுமன்றத்திற்குச் செல்கின்றோம்.

பாராளுமன்றத்திற்கு வெளியே பொலிஸாரின் சோதனையிடல் கிளிநொச்சி செல்கையில் காணப்பட்ட சோதனையிடல் போன்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.