பிணையில் வந்தவருக்கு பொலிஸில் மீளவும் பதவி

வெலிக்­க­டைச் சிறைச்­சாலை படு­கொலை சம்­ப­வம் தொடர்­பில் கைதாகி விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுப் பிணை அனு­ம­தி­யில் வெளியே வந்­துள்ள பொலிஸ் போதைப் பொ­ருள் தடுப்­புப் பிரி­வின் பரி­சோ­த­கர் நியோ­மல் ரங்­க­ஜீவ மீண்­டும் பணி­யில் இணைத்­துக் கொள்­ளப்­பட்­டுள்­ளார்.

பொலிஸ் தாபன கோட்­பா­டு­க­ளின் பிர­கா­ரம் பொலிஸ்மா அதி­ப­ரால் அவர் பழைய பதவி நிலைக்கே அமர்த்­தப்­பட்­டுள்­ளார் என்று பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் ருவான் குண­சே­கர குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்­கடை சிறைச்­சா­லை­யில் இடம்­பெற்ற கல­வ­ரத்­தில் 27 கைதி­கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர்.

சம்­ப­வம் தொடர்­பில் பொலிஸ் போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரி­வின் பரி­சோ­த­கர் நியோ­மல் ரங்­க­ஜீவ மற்­றும் மக­சீன் சிறைச்­சா­லை­யின் முன்­னாள் கண்­கா­ணிப்­பா­ளர் எமில் ரஞ்­சன் ஆகி­யோர் கடந்த மார்ச் மாதம் கைது செய்­யப்­பட்­ட­னர்.

தாம் கைது செய்­யப்­பட்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்து நியோ­மல் ரங்­க­ஜீவ மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் மனுத்­தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

மனுவை விசா­ரித்த மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கடந்த செப்­ரெம்­பர் மாதம் 25ஆம் திகதி நியோ­மல் ரங்­க­ஜீ­வவை பிணை­யில் செல்ல அனு­ம­தித்­தது.

தம்மை மீண்­டும் சேவை­யில் அமர்த்த வேண்­டும் என்று கடந்த 19ஆம் திகதி பொலிஸ்மா அதி­ப­ரின் உத­விப் பணி­ம­னை­யில் நியோ­மால் ரங்­க­ஜீவ மேன்­மு­றை­யீடு செய்­தி­ருந்­தார்.

அவர் தற்­போது பணி­யில் இணைக்­கப்­பட்­டுள்­ளார். மேன்­மு­றை­யீட்டை விசா­ரணை செய்த பொலிஸ்மா அதி­பர் இந்த நட­வ­டிக்கை எடுத்­தார் என்று பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு குறிப்­பிட்­டுள்­ளது.

அதே­வேளை, இவ­ரு­டன் கைது­செய்­யப்­பட்ட மக­சீன் சிறைச்­சா­லை­யின் முன்­னாள் கண்­கா­ணிப்­பா­ளர் எமில் ரஞ்­சன் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.