துப்பாக்கிகளுடன்- இருவர் கைது!!

வீடொன்றில் இருந்து இரண்டு சட்ட விரோத துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. அளுத்கம பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 43 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.