தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு கடுமையாகத் தாக்கிய பொலிஸார்!!

தேசிய அடை­யாள அட்­டையை எடுத்­துச் செல்­ல­வில்லை என்­ப­தற்­காக வீதி­யால் பய­ணித்­த­வ­ரைக் கைது செய்த சுன்­னா­கம் பொலி­ஸார், தலை­கீ­ழா­கக் கட்­டித் தொங்­க­விட்டு சித்­தி­ர­வதை செய்­த­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

இது­பற்­றிப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் யாழ்ப்­பாண அலு­வ­ல­கத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.

ஏழா­லை­யைச் சேர்ந்த பால­சிங்­கம் – பிர­காஸ் என்­ப­வரே முறைப்­பாடு செய்­துள்­ளார். குறித்த முறைப்­பாடு தொடர்­பில் மேற்­படி இளை­ஞ­ரைத் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது,

ஏழா­லை­யில் கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 அள­வில் வீடு­நோக்கி கால்­ந­டை­யா­கச் சென்­று­ கொண்­டி­ருந்­தேன். அங்கு வந்த மைத்­து­ன­ரின் முச்­சக்­கர வண்­டி­யில் ஏறிப் பய­ணித்­தேன். எனது வீட்­டுக்கு மிக அண்­மை­யாகப் பொலி­ஸார் வீதிச் சோத­னை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். மைத்­து­னர் சகல ஆவ­ணங்­க­ளை­யும் காண்­பித்­தார்.. இறு­தி­யில் என்­னி­டம் அடை­யாள அட்­டை­யைக் கோரி­னர். நான் அடை­யாள அட்­டையை எடுத்­துச் சென்­றி­ருக்­க­வில்லை. அவ்­வா­றெ­னின் பொலிஸ் நிலை­யம் வரு­மாறு என்னை அழைத்­த­னர். எனது மைத்­து­ன­ரும் கூடவே வந்­தார். பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கூட்­டிச் சென்று என்­னைத் தலை­கீ­ழா­கக் கட்­டித் தூக்­கி­னர். எனது மைத்­து­ன­ரான பால­சிங்­கம் – நிரஞ்­சனை (வயது 29) என்­ப­வரை அவர்­க­ளது சமை­யல் கூடத்­துக்குள் கொண்­டு ­சென்று அடைத்­த­னர்.

எங்­கள் இரு­வ­ரை­யும் பொலி­ஸார் கார­ணம் எது­வுமே கூறாது பல­மா­கத் தாக்­கிச் சித்­தி­ர­வதை செய்­த­னர். எங்­க­ளைத் திரு­டர்­களா என்­றும் எல்.ரீ.ரீ.ஈ இல் இருந்­த­னியா என்­றும் கேட்­ட­னர். 20ஆம் திகதி மாலை­யில் எந்­தச் சட்ட நட­வ­டிக்­கை­யும் இன்றி விடு­விக்­கப்­பட்­டோம். ஆனால் பொலி­ஸா­ரின் சித்­தி­ர­வதை வேத­னை­க­ளைத் தாங்க முடி­ய­வில்லை. தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் 20ஆம் திகதி சிகிச்­சைக்­குச் சென்­றோம். மருத்­துவ விடு­தி­யில் தங்க வைக்­கப்­பட்­டுச் சிகிச்சை வழங்­கி­னர்.
நேற்­று­முன்­தி­னம் விடு­விக்­கப்­பட்­டோம். மனித உரிமை ஆணைக்­கு­ழு­வில் இது தொடர்­பில் முறை­யிட்­டுள்­ளோம். தற்­போது பொலி­ஸார் எங்­க­ளு­டன் தொடர்­பு­ கொண்டு சம­ர­சம் பேசு­கின்­ற­னர் – எனத் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் சுன்­னா­கம் பொலி­ஸா­ரி­டம் கேட்­ட­போது, “அவர்­கள் வீதி­யில் மது­போ­தை­யில் சென்­று­ கொண்­டி­ருந்­த­னர். தமக்கு என்ன நடந்­தது என்று தமக்­குத் தெரி­யாது என்றே அவர்­கள் கூறி­னர்” என்று தெரி­வித்­த­னர்.

மருத்­து­வ­ம­னைத் தரப்­பி­டம் தொடர்­பு­ கொண்­ட­ போது, இரு­வ­ருக்­கும் காயங்­கள் காணப்­ப­டு­கின்­றன. சிகிச்சை வழங்­கப்­பட்­டது” என்று தெரி­விக்­கப்­பட்­டது.