தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை — அர­சி­யல் தேவை­க­ளுக்­காக பயன்படுத்தும் அரசுகள்!

இலங்­கை­யில் ஆட்­சிப் பீட­மே­றிய சகல அர­சு­க­ளும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை தமது அர­சி­யல் தேவை­க­ளுக்­காக மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். அதன் பின்­னர் அவர்­க­ளைக் கைவி­டும் அல்­லது ஏமாற்­றும் நிலையே காணப்­ப­டு­கின்­றது.

சில விட­யங்­கள் தொடர்­பில் கூட்­ட­மைப் புக்­கும் எமக்­கும் கருத்து வேறு­பாடு இருந்­தா­லும், எதிர்­கா­லத்­தில் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து பணி­யாற்ற முடி­யும். இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி.) தெரி­வித்­துள்­ளது.

மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க ‘த ஹிண்டு’ ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் ஒடுக்­கு­முறை அர­சு­க­ளால் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரை தெற்­கி­லும், வடக்­கி­லும் பிர­தி­நித்­து­வம் செய்­கின்­றன.

எதிர்­கா­லத்­தில் தமிழ் மக்­கள் தமது உரி­மை­க­ளைப் பெற்று சம­வு­ரி­மை­யு­டன் வாழ்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­க­ளில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து செயற்­பட மக்­கள் விடு­தலை முன்­னணி தயா­ராக உள்­ளது.

இலங்­கை­யில் ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் மாற்­றத்­துக்கு மத்­தி­யில், ஆட்­சி­பீ­ட­மே­றும் தரப்­பி­னரை தீர்­மா­னிக்­கும் சக்­தி­யாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தற்­போது காணப்­ப­டு­கி­றது.

தலைமை அமைச்­சர் மாற்­றம் மற்­றும் நாடா­ளு­மன்ற கலைப்­புக்கு எதி­ராக தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு செயற்­ப­டு­வ­தோடு, அதே நிலைப்­பாட்­டி­லேயே மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் உள்­ளது.

எந்­தத் தரப்­புக்­கும் ஆட்­சி­ய­மைக்க ஆத­ரவு வழங்­க­மாட்­டோம். நடு­நி­லை­யா­கவே செயற்­ப­டு­வோம்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் பணி­யாற்­று­கின்­றன.

அவ்­வா­றான அணு­கு­மு­றையை கொண்­டுள்ள கட்­சி­கள் இணைந்து பணி­யாற்ற முடி­யும்.

சில விட­யங்­கள் தொடர்­பில் எங்­கள் மத்­தி­யில் கருத்­து­வே­று­பா­டு­கள் உள்­ள­போ­தி­லும் எதிர்­கா­லத்­தில் நாங்­கள் இணைந்து பணி­யாற்ற முடி­யும்.

மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யி­டம் இர­க­சிய நிகழ்ச்­சி­நி­ரல் இல்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ட­மும் அவ்­வா­றான இர­க­சிய நிகழ்ச்சி நிரல் இல்லை.

இவ்­வா­றான வெளிப்­ப­டைத் தன்மை காணப்­ப­டு­வ­தால் ஒரு­வ­ருக்கு மற்­றை­ய­வ­ரின் நிலைப்­பாடு தெரி­யும் என்­ப­தால் நாங்­கள் சிறப்­பாக இணைந்து செயற்­பட முடி­யும்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் மகிந்த ராஜ­பக்ச தரப்­பி­ன­ரும் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு காண்­பிப்­ப­தற்­கா­க­வும் தங்­கள் பலத்தை காண்­பிப்­ப­தற்­கா­க­வும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

இரு கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரு­டன் நேர்­மை­யாக நடந்­து­கொள்­ள­வில்லை. அவர்­கள் தங்­கள் நல­னிற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை பயன்­ப­டுத்­தி­னார்­கள் – என்­றார்.