காணாமல்போன மாணவனின் தடயங்களில்லை ; சிவப்புக் கோட்டால் பாடசாலையில் பெயர் வெட்டப்பட்டது

பலாங்கொடை பகுதியில் காணாமல்போன பாடசாலை மாணவனின் பெயர் பாடசாலை பதிவிலிருந்து சிவப்புக் கோட்டினால் வெட்டி நீக்கப்பட்டுள்ளது.

 

குறித்த மாணவன் காணாமல்போய் நேற்றுடன் நான்கு மாதங்களை கடந்துள்ளமையினால் மாணவனின் பெயர் இவ்வாறு சிவப்பு மையால் வெட்டி நீக்கப்பட்டுள்ளதாக அப் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளதுடன், அரச சுற்று நிரூபத்துக்குமைய தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு மாணவன் பாடசாலைக்கு சமூகம் தராவிடின் அவரது பெயர் பாடசாலை தினவரவு இடாப்பிலிருந்து நீக்கப்படுவது வழமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை காணாமல்போய் நான்கு மாதங்களை கடந்துள்ள நிலையில் சிறுவனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.