கடைகளில் மிளகாய்த்தூள் முடிந்துவிட்டது பாராளுமன்றத்தில் பெற்றுத்தர முடியுமா? : சபையில் செல்வம் கிண்டல்

கடைகளில் மிளகாய்த்தூள் முடிந்துவிட்டது பாராளுமன்றத்தில் பெற்றுத்தர முடியுமா? என  மக்கள் எம்மிடமே கேள்வி  கேட்கின்றனர்.

 

மக்களின் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கோரிக்கை விடுத்தார்.

சபாநாயகருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட சகலரும் கடுமையாக தண்டிக்கபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டர்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பாராளுமன்றம் எதிர்நோக்கியுள்ள சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.