வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான கிண்ணையடி மற்றும் சுங்காங்கேணி போன்ற கிராமங்களில் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.தமிழ்த் தேசிய முன்னணியின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் த.சுரேஸ் உள்ளிட்ட குழுவினர் குறித்த நிவாரணக் பணியினை மேற்கொண்டனர்.இதன்போது இவ் நிவாரணம் வழங்கும் விடயத்தில் தாம் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாகவும் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் மக்களுக்குத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் விளக்கமளித்து உரையாற்றினார்.இதேவேளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு மேற்குறித்த குழுவினர் வெள்ள நிவாரணம் வழங்கும் பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.