ஜனாதிபதி கொலை சதி- புதிய தகவல்கள் அடுத்த சில நாட்களில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்கள் சிலவற்றை அடுத்த சில நாட்களில் வெளியிடவுள்ளதாக  தயாசிறிஜெயசேகர தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் போது  முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள தயாசிறிஜயசேகர இந்த தகவல்களை விரைவில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக  ஊழலுக்கு எதிரான அமைப்பின் நாமல் குமார தெரிவித்தமை இலங்கை அரசியலில் பெரும்பரப்பரப்பை  ஏற்படுத்தியதும் இது தொடர்பில் இந்திய பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

 

பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் இயக்குநரான பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவும் இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.