சம்பந்தன், அநுரகுமார ஏன் ரணிலுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள் ? – விமல் விளக்கம்

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியானால் தனது பதவி பறிபோகும் என்ற  பயத்தினாலேயே   இரா. சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குகின்றார். அதேபோன்று சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை இழந்தால் தன்னுடைய பதவி பறிபோகும் என்பதாலேயே அநுரகுமார திஸாநாயக்கவும் ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 

ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் நாட்டை ஒப்படைத்தால் இன்னும் சில காலங்களில் நாடே இல்லாமற்போய்விடும். எனவே நாட்டைக் காப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (22-11-2018) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.