கார்த்திகை இருபத்தியேழு

 

கார்த்திகை தீபங்களை
மாவீரர்கள் ஏற்றியிருக்கிறார்கள்
ஈழத்தமிழரின் வரலாறுகளை
எங்கள் தமிழீழ மண்ணின் விருட்சங்கள்
செதுக்கியிருக்கிறார்கள்

மண் மேல் கொண்ட தாகம்
மரணம் வரை அழைத்தது அவர்களை
நீங்கள் இறக்கவில்லை
புதைக்கப் பட்டுள்ளீர்கள் புதைக்குழிகளில் அல்ல எமது
அகக் குழிகளில்

உங்களது குடும்பம் மேல் அக்கறை கொள்ளவில்லையா மாவீரர்களே
தேசத்தை காக்க போர்க்களம் புகுந்தீர்கள்
தாய்ப் பாசத்தின் நீரூற்றை
கல்லறைகளில் கண்டேன் அன்று

நீங்கள் இறக்கவில்லை கருவில் உங்களை சுமக்கின்றாள் தமிழன்னை..

அவன் வீரத்தின் அடையாளம்
வில்லுக்கு தடையேது
விளங்கி விட்டதா காடையர்களே
நாங்கள்
நாட்டுக்காக மட்டும் எங்கள் உயிர்களை தியாகம் செய்யவில்லை

தமிழன் வாழ்ந்தான் என்றால்
பல தலமுறை பேச வேண்டும்
எனது முப்பாட்டன்
வீரத்தின் வேங்கை
அவனை விலை கொடுத்து வாங்க முடியாது
நாங்கள் தமிழர்கள்
எங்கள் வாழ்க்கையின் வலிகள்
அந்த தோட்டாக்களுக்கு தெரியும்

நாங்கள் சாகவில்லை சரித்திரம் படைத்திருக்கிறோம்
செத்து மடிந்தாலும்
யாரும் எழுதி வைக்க தேவையில்லை
நாங்களாகவே
சரித்திரத்தை விசித்திரமாக
படைத்து விட்டோம்

ஆம் புதைக்கப் பட்ட நாங்கள்
புல் பூண்டுகளாக உயிர்தெழுவோம் என்று ஒருபோதும் நினைத்து விடாதீர்கள்
ஒவ்வொரு தமிழனின் அடி மனதில்
உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம்

நீங்களும் தட்டி எழுப்புங்கள்
நாங்கள் சாதாரண மனிதர்கள் அல்ல
சாவினை விரும்பி
சகோதரத்தை மறந்து
பட்டினி கிடந்து
பகல் இரவு தொலைத்து
இப்பாரினில் யுத்தம் செய்தவர்களாயிற்றே

நீதி வேண்டி போரிட்ட
எங்கள் மாவீரர் கடவுள்களை
மறந்திட முடியுமா

தாய் தந்தையை மறந்து
போர்க்களம் புகுந்த
பிஞ்சுக் கரங்களை வணங்கி நிற்கின்றோம்

பூமாலை போட்டு
எங்கள் தெய்வங்களை புனிதப் படுத்துகின்றோம்

இந்த பூமாதேவி பெற்றெடுத்த
புனிதர்களை
நாங்கள் கார்த்திகை மாதம் இருபத்தியேளில்
இரு கரம் கூப்பி எங்கள் மாவீரர்
கடவுள்களை வணங்கி நிற்கின்றோம்

தெ.ரசிக்குமார்