கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் 6 கிலோ பிளாஸ்டிக்

இறந்து கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் இருந்து சுமார் 6 கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை பார்த்து சுற்றுச் சூழ ஆர்வலர்கள அதிர்ச்சிக்குள்ளாகி சம்பவமொன்று இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. குறித திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் 115 பிளாஸ்டிக் கோப்பைகளும், 25 பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் பொத்தல்களும், கிழிந்த தார்பாய் துண்டுகள், செருப்பு போன்ற குப்பைகளும் என மொத்தம் 6 கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவுகளை மீட்டுள்ளனர்.

இது குறித்து கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பான ‘டபிள்யூ.டபிள்யூ.எப் இந்தோனேசியா’வைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் திவி சுப்ரப்தி கூறும்போது, திமிங்கிலத்தின் இறப்புக்குக் காரணம் தெரியவில்லை. எனினும், பிளாஸ்டிக் கழிவுகளும் காரணமாக இருக்கலாம் என்றார்.

கடலில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிகரிப்பதைத் தடுக்க இந்தோனேசிய அரசு உடனடியாக கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் இதன்போது ஆர்வலர்கள் வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.