மாவீரர் நாள் நிகழ்வுகளை தடுக்க பொலிஸார் நீதிமன்றில் மனு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளியாக இருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன.

அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு இன்று பிற்பகல் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த மனுவைப் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.

அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த மாவீரர்  நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும்” என்று பொலிஸார் மனுவில் கேட்டுள்ளனர்.