பாராளுமன்ற பார்வையாளர் கலரி வெள்ளியும் மூடல்

பாராளுமன்ற பார்வையாளர் கலரி எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் மூடப்படுமென படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10.30 மணி வரை கடந்த திங்கட்கிழமை அமர்வின் போது பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விற்கும் பார்வையாளர் கலரி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.