நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ள் பாணி­யில் பிர­தேச சபை உறுப்­பி­னர் கடிதத் தலைப்பு!!

பிர­தேச சபை­யின் அனு­மதி எடுக்­காது பிர­தேச சபை உறுப்­பி­னர் ஒரு­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கடி­தத் தலைப்பு போன்ற வடி­வத்­தில் கடி­தத் தலைப்­பைப் பயன்­ப­டுத்­து­வது சர்ச்­சை­யா­கி­யுள்­ளது.

இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: நல்­லூர் பிர­தேச சபை­யின் உறுப்­பி­னர் ஒரு­வர் சபை­யின் அனுமதியைப் பெற்றுக்கொள் ளாது கடி­தத் தலைப்பு ஒன்றை தாமா­கவே உரு­வாக்­கிப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றார். அவர் பயன்­ப­டுத்­தும் கடி­தத் தலைப்­பில் இலங்கை அர­சின் இலட்­சினை பொறிக்­கப்­பட்­டுள்­ள­து­டன் நல்லூர் பிரதேச சபையின் பழைய இலட்­சி­னை­யும் பொறிக்­கப்­பட்­டுள்­ளது. இது­மட்­டு­மல்­லாது நாடா­ளு­மன்­றத்­தின் செங்­கோ­லைப் போன்ற செங்­கோ­லின் உரு­வப்­ப­ட­மும் பொறிக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் சபை­யின் தவி­சா­ள­ரைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, எமது சபை­யில் உறுப்­பி­னர்­கள் கடி­தத் தலைப்பு பயன்­ப­டுத்­து­வது தொடர்­பில் இது­வரை பேசப்­ப­ட­வில்ல. அத்­து­டன் சபை­யின் இலட்­சி­னை­யில் நாம் சில மாற்­றங்­க­ளைச் செய்­துள்­ளோம். அதனை சபைக்­கும் தெரி­யப்­ப­டுத்தி ஆராய்ந்­துள்­ளோம் – – என்­றார்.

இது தொடர்­பில் உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ள­ரைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள் இலங்கை அர­சின் இலட்­சினை, செங்­கோல் என்­ப­ன­வற்­றில் கடி­தத் தலைப்­பு­க­ளைப் பாவிக்க முடி­யாது. மேலும் சபை­யின் அனுமதி பெற்றே கடி­தத் தலைப்­புக்­களை பாவிக்க முடி­யும். அவ்­வாறு பாவிப்­ப­தா­யின் அவர்­க­ளின் பெய­ரும், பதவி நிலை­யும் மட்­டுமே பொறிக்க முடி­யும். இதனை விடுத்து முர­ணாக செயற்­ப­டு­வது குற்­றம். இந்த விட­யம் தொடர்­பில் முறைப்­பாடு கிடைத்­தால் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் -– என்­றார்.