நாடா­ளு­மன்­றத் தேர்­தலை விடுத்து அர­ச­த­லை­வர் தேர்­தலை நடத்­துங்­கள் -நவீன் திஸா­நா­யக்க எம்.பி !!

பொதுத் தேர்­தலை விடுத்து அர­ச­த­லை­வர் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­திக்­காட்­டு­மாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான நவீன் திஸா­நா­யக்க வலி­யு­றுத்­தி­னார்.

மேலும், அர­ச­த­லை­வர் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்­கள் தமது கட்­சி­யில் தயா­ரா­கவே இருக்­கி­றார்­கள் என்­றும் அவர்­க­ளில் யார் பொது­வேட்­பா­ளர் என்ற விட­யம் இறுதி நேரத்­தி­லேயே அறி­விக்­கப்­ப­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மல்­வத்து மகா­நா­யக்­கத் தேரரை நேற்று (செவ்­வாய்க்­கி­ழமை) சந்­தித்­த­தை­ய­டுத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்­ட­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது ”மக்­க­ளின் கருத்­துக்­களைக் கேட்­க­வேண்­டு­மா­னால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்­குச் செல்­ல­மு­டி­யும். ஆனால், பொதுத் தேர்­த­லுக்­குச் செல்­ல­மு­டி­யாது. இதனை உயர்­நீ­தி­மன்­ற­மும் உறு­தி­யா­கக் கூறி­விட்­டது. அதே­நே­ரம், அர­ச­த­லை­வர் தேவை­யெ­னில் அத­ச­த­லை­வ­ருக்­கான தேர்­த­லுக்­குச் செல்­ல­லாம். ஐக்­கிய தேசி­யக் கட்சி இதனை முழு­மை­யாக வர­வேற்­கும். எமது கட்­சி­யில் நிறைய வேட்­பா­ளர்­கள் இதற்­குத் தயா­ரா­கவே இருக்­கி­றார்­கள். அவர்­க­ளில் யார் பொது­வேட்­பா­ளர் என்­பதை உரி­ய­நே­ரத்­தில் முடி­வு­செய்து அறி­விப்­போம். எமது கட்­சி­யா­னது ஜன­நா­ய­கத்தை முழு­மை­யா­கக் கடைப்­பி­டிக்­கும் ஒரு கட்­சி­யா­கும். அந்­த­வ­கை­யில், அர­ச­த­லை­வர் வேட்­பா­ளர் யார் என்­பதை எமது கட்­சி­யின் மத்­திய குழு­வும் நாடா­ளு­மன்­றக் குழு­வும் இணைந்தே தீர்­மா­னிக்­கும். இதற்கு முன்­னர் இடம்­பெற்ற அர­ச­த­லை­வர் தேர்­தல்­க­ளின் போதும் நாம் இவ்­வா­றான நடை­மு­றை­யையே பின்­பற்­றி­யி­ ருந்­தோம். எனவே இந்த விட­யத்­தில் எமக்கு எவ்­வித பிரச்­சி­னை­யும் இல்லை” என்­றார்.