தனி நாட்­டுக் கோரிக்­கைக்­கா­கவே – கூட்­ட­மைப்பு ரணி­லுக்கு ஆத­ர­வாம்

நாட்­டின் தேசி­யப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் குரல் எழுப்­ப­வில்லை. தமி­ழர்­க­ளுக்­கான தனி நாடு வழங்­கப்­பட வேண்­டும் என்­பதே அவர்­க­ளது நிலைப்­பா­டா­க­வுள்­ளது எனத் தெரி­வித்­துள்ள மகிந்த ராஜ­பக்­ச­வின் முன்­னாள் பேச்­சா­ளர் மொஹான் சம­ர­நா­யக்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அவர்­க­ளது கோரிக்­கைக்­குச் சாத­க­மா­கச் செயற்­ப­டு­வார் என்­ப­தா­லேயே கூட்­ட­மைப்­பி­னர் தற்­போது அவ­ருக்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­ற­னர் என­வும் தெரி­வித்­தார்.

நாட்­டின் தற்­போ­தைய அர­சி­யல் நிலை குறித்து கருத்து வெளி­யி­டும் வகை­யில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது; கடந்த 2015 ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­னர் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளைப் புறந்­தள்ளி இரா­ணு­வத்­தி­ன­ரைக் காட்­டிக்­கொ­டுக்­கும் செயற்­பாடு, நாட்­டைப் பிள­வு­ப­டுத்­தும் அர­சமைப்பு, சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்­கள், நாட்­டின் தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­தல் போன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­மை­யி­னா­லேயே அர­ச­த­லை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது அதி­ருப்­தி­ய­டைந்து, மகிந்த ராஜ­பக்­சவை தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­தார் என்­றார்.