சகிலா நடிகை மீ டூ -வில் புகார்

சகிலா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை ரிச்சா சட்டா பரபரப்பு பாலியல் புகாரை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சினிமாவில் பெண்களை பலரும் வெறும் சதைகளாக  தான் பார்க்கிறார்கள். தொப்புளை காட்டச் சொல்லி படப்பிடிப்பில் பிரபல இயக்குனர் கட்டாயப்படுத்தியதாக  தனக்கு நடந்த கொடுமையை குறித்து ரிச்சா சட்டா விவரித்துள்ளார்.

ரிச்சா சட்டா தனது மீடூ குற்றச்சாட்டிற்கு காரணமாக இயக்குனர் யார் என பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சகிலா வேடத்தில் ரிச்சா சட்டா :

கேரளாவை சேர்ந்த சகிலா , 90-களில் கவர்ச்சி உலகில் கொடிகட்டி பறந்தார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததோடு, இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் அதிக ரசிகர்களின் செல்வாக்கை பெற்றவர்.