கனேடிய தூதுவர் – நாமலுக்கு டுவிட்டரில் சாட்டையடி

இலங்கைக்கான கனேடிய தூதுவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு மிடையில்  டுவிட்டரில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

“ஜே.வி.பி., ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை மேற்கொள்வது சுவாரஷ்யமாக உள்ளது.

இந்த கட்சிகள் தங்கள் மக்கள் மற்றும் சமூகத்தவர்களை சந்திப்பது குறித்து அதிக அக்கறை செலுத்தினால், தேர்தலிற்கான மக்களின் எதிர்பார்ப்பினை செவிமடுத்தால் இலங்கை நன்மையடையும்” என நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நாமலின் இந்த கருத்துக்கு பதிலளித்த கனடாவிற்கான தூதுவர், “நீங்கள் உங்கள் பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர்கள் சிலர் யாரை சந்திக்கின்றனர் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.