ரணில்,மகிந்த சிறப்புரிமையை- பிடுங்க ஜே.வி.பி. வலியுறுத்து!

மகிந்த ராஜ­பக்ச அமைத்த அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

தற்­போது நாட்­டில் அர­சும் இல்லை, தலைமை அமைச் ச­ரும் இல்லை. தற்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ, மகிந்த ராஜ­பக்­சவோ தற்­போது தலைமை அமைச்­ச­ராக இல்ல.

அவர்­க­ளின் சிறப்­பு­ரி­மை­கள் அனைத்­தை­யும் மீளப் பெற வேண்­டும்.

இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளது மக்­கள் விடு­தலை முன்­னணி.

நேற்று நடை­பெற்ற நாடா­ளு­மன்ற அமர்­வின் பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போது அந்­தக் கட்­சி­யின் தலை­வர் அனு­ர­கு­மார் திசா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது,

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ, மகிந்த ராஜ­பக்­சவோ அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யாது. நிதி நிர்­வா­கம் தொடர்­பான முடி­வு­களை எடுக்­கும் அதி­கா­ரம் நாடா­ளு­மன்­றத்­துக்கு இருப்­ப­தால் தலைமை அமைச்­ச­ரின் செய­ல­ருக்­கான செல­வீ­னங்­களை கட்­டுப்­ப­டுத்­தும் பிரே­ர­ணை­யைச் சமர்­பித்­துள்­ளோம்.

நிதி அதி­கா­ரம் நாடா­ளு­மன்­றத்­துக்கே உள்­ளது. நிதி தொடர்­பான தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வர முடி­யும். பெரும்­பான்மை உள்­ளது என்று அவர்­கள் கரு­தி­னால் அந்­தத் தீர்­மா­னத்­தைத் தோற்­க­டிக்க முடி­யும்.

தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலைமை பல குழப்­பங்­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ளது. 2018ஆம் ஆண்­டுக்­கான பதீட்­டுத் திட்­டத்­தில் அமைச்­சுக்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இவற்­றைப் பயன்­ப­டுத்தி அமைச்­சுக்­க­ளில் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்­குச் சம்­ப­ளம் வழங்க முடி­யும். எனி­னும் ஜன­வரி மாதத்­துக்­கான ஜன­வரி மாதத்­துக்­கான சம்­ப­ளத்தை வழங்­கு­வது தொடர்­பில் சந்­தே­கம் உள்­ளது.

மிள­காய்த் தூள் கலந்த நீரைக் கொண்டு தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டமை உண்­மையே. தேவை­யா­யின் அது தொடர்­பாக இர­சா­ய­னப் பகுப்­பாய்வை நடத்த முடி­யும்.- என்­றார்.