பொலிஸ் அதிகாரிகள் மீது- மிள­காய்த் தூள் விசிறித் தாக்­கு­தல்!!

பெரும் போதைப் பொருள் வர்த்­த­கத்தைச் சுற்­றி­ வ­ளைத்­துப் பிடிக்­கச் சென்ற பொலிஸ் அதி­கா­ரி­கள் மீது மிள­காய்த் தூள் விசி­றித் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் தம்­புள்ளை, இனா­ம­லுவ பிர­தே­சத்­தில் நடந்­துள்­ளது.

பெரும் போதைப் பொருள் விற்­பனை நிலை­யம் ஒன்றை சுற்­றி­வ­ளைப் ப­தற்­காக தம்­புள்ளை மாவட்ட சுற்­றி­ வ­ளைப்­புப் பிரி­வைச் சேர்ந்த 5 அதி­கா­ரி­கள் சென்­றுள்­ள­னர்.

அந்த இடத்­தைச் சுற்­றி­வ­ளைத்­த­ போது அங்­கி­ருந்த வர்த்­த­கர் அதி­கா­ரி­கள் மீது மிள­காய்த் தூளை வீசி விட்டு மகி­ழுந்­தில் தப்­பிச் சென்­றுள்­ளார்.

மிள­கய் தூள் தாக்­கு­த­லுக்கு இலக்­கான தம்­புள்ள மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதே­வேளை, அண்­மை­யில் நடந்த நாடா­ளு­மன்ற அமர்­வில் ஆளும் தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எதிர்த் தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மீது மிள­காய்­தூள் கரை­சலை வீசி­றித் தாக்­கு­தல் நடத்­தி­யி­ருந்­த­னர்.