புலிகளின் பகுதிக்குள் சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் ஜோ ரூட் உட்பட வீரர்கள் பலர் மன்னார் பெரியமடு பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

போரின் போது புலிகளால் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சென்றுள்ளனர்.

இங்கிலாந்து அரசாங்கத்தின் உதவிக்கமைய மெக் என்ற கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பு, மன்னார் பெரியமடு பிரதேசத்தில்

கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை கண்காணிப்பதற்காக இங்கிலாந்து கிரிகெட் அணி வீரர்கள் சென்றுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் ஜே ரூட், ஜேம்ஸ் டொரிஸ், கீடன் ஜெனிக்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, ஒலி ஸ்டோன் ஆகிய வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், அணி முகாமையாளர்கள் ஆகியோர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து அனைத்து வீரர்களுக்கும் அவசியமான பாதுகாப்பு இலங்கை விமானப்படையினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.