திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் எழிலனின் தந்தையார் காலமானார்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்து இறுதி யுத்தத்தின்போது காணாமல்போன எழினின் (சசிதரன்) தந்தையார் இன்றைய தினம் காலமாகிவிட்டார்.

கிருஷ்ணபிள்ளை சின்னத்துரை எனும் அன்னாரது பூதவுடல் இலக்கம் 156 விவேகானந்தநகர் கிளிநொச்சியிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக எழிலனின் மனைவியும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

போரின்போது காணாமல்போன தனது மகனைக் கண்டபின்பே உயிர்துறப்பேன் என அன்னார் கூறிவந்ததுடன் இதுவரை காலமும் எழிலனின் நினைவுடனேயே ஏக்கத்துடன் இருந்ததாகவும் உறவினர்களால் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் சாவதற்கு முன்னரும் “தம்பி வந்துவிட்டானா? தம்பி வந்துவிட்டானா?” என ஏக்கத்துடன் கேட்டதாகவும் உறவினர்களால் உருக்கமாக கூறப்பட்டுள்ளது.