தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்- இராஜதந்திரிகளிடம் கூட்டமைப்பு

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்கள்  வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர்

; தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் பாராதூரமான விளைவுகள் உருவாகலாம் இது  இலங்கையின் நலனிற்கு உகந்த விடயமல்ல என வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

உருவாககூடிய குழப்பநிலை சட்டமொழுங்கின்மை காரணமாக சிறுபான்மையினத்தவர்களே பாதிக்கப்படலாம் குறிப்பாக தமிழ் மக்கள் பாதிக்கப்படலாம் என எடுத்துரைத்தோம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.