கூட்டமைப்பு – – இராஜதந்திரிகள் கொழும்பில் அவசரச் சந்திப்பு!!

நாட்­டில் ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் நெருக்­கடி நாளுக்கு நாள் அதி­க­ரித்­துச் செல்­லும் நிலை­யில், தமிழ் மக்­க­ளின் நிலமை தொடர்­பா­க­வும், தற்­போ­துள்ள அர­சி­யல் சூழல் தொடர்­பா­க­வும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் புக்­கும் கொழும்­பி­லுள்ள தூத­ர­கங்­க­ளின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்­கும் இடை­யில் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.

கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் இன்று மாலை 4 மணிக்கு இந்­தச் சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் 14 உறுப்­பி­னர்­க­ளும் பங்­கேற்­க­வுள்­ள­னர். மேற்­கு­லக நாடு­க­ளின் தூத­ர­கங்­க­ளைச் சேர்ந்த உயர் அதி­கா­ரி­கள், இந்­தி­யத் தூத­ரக உயர் அதி­கா­ரி­கள் இந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்­க­வுள­னர்.

மகிந்த ராஜ­பக்­க­ச­வுக்கு எதி­ரா­கக் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யமை தொடர்­பி­லும், அது தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்­பி­லும், தற்­போ­துள்ள அர­சி­யல் நெருக்­கடி நிலையை எவ்­வாறு கையாள்­வது என்­பது தொடர்­பி­லும் இந்­தச் சந்­திப்­பில் பேசப்­ப­ட­வுள்­ளது.