அமெரிக்க பார் கழிவறை சுவரில் இந்து கடவுள்கள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹவுஸ் ஆஃப் எஸ் என்ற இரவு விடுதியின் சுவர்கள், கழிவறை சுவர்களில் இந்துக் கடவுள்களின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஹவுஸ் ஆஃப் எஸ் என்ற இரவு விடுதிக்கு சென்ற ஒஹியோவிலிருந்து சென்ற இந்தியா – அமெரிக்க பெண்ணான அன்கிதா மிஸ்ரா அங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து வியப்படைந்தார்.

அந்த இரவு விடுதியின் சுவர்களிலும், கழிப்பறை சுவர்களிலும் இந்துக் கடவுள்களான விநாயகர், காளி, சரஸ்வதி, சிவன் உள்ளிட்ட இந்துக் கடவுளின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அதை புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்த அன்கிதா, அது குறித்து தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக நீண்ட போஸ்டை போட்டார். அதில் இந்து மதம் என்றால் என்ன. இந்துக் கடவுள்கள் பற்றி, மக்களின் நம்பிக்கை குறித்தும், அதோடு இந்துக் கடவுள்கள் வால்போஸ்டர்களாக ஒட்டப்பட்டு அவமானப்படுத்துவதாகவும், அதை உடனே நீக்க வேண்டும் என்று இரவு விடுதி உரிமையாளருக்கு விளக்கி மெயில் அனுப்பியுள்ளார்.

உரிமையாளர் பதில் :

அன்கிதா மிஸ்ராவின் மெயிலை பார்த்த அந்த விடுதி உரிமையாளர்களில் ஒருவரான கேய் புர்கி, “உங்களின் மெயிலை ஒன்றுக்கு இரு முறை நன்றாக படித்தேன். இந்த விடுதியின் வால்பேப்பர்கள் ஒட்ட முழுக் காரணம் நான் தான்.

நான் இதற்காக வருந்துகிறேன். எனக்கு இந்துக் கடவுள்கள் குறித்து தெரியாது. அதோடு இந்துக்களின் கலாச்சாரம் தெரியாது. அதானால் இந்த தவறு ஏற்பட்டு விட்டது. இதற்காக நான் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.உடனே அவற்றை நீக்கப்படும்.

உங்களின் இந்த மெயிலுக்கு மிக்க நன்றி. தைரியமாக இதுகுறித்து எங்களுக்கு புகார் அளித்த உங்களைப் பாராட்டுகிறேன்” என பதில் அனுப்பியுள்ளார்.