பேர­வை­யில் இணைந்த கட்­சி­கள் சுய­ந­லன் பார்ப்­ப­தால் முரண்­பாடு சி.வி.விக்­னேஸ்­வ­ரன் குற்றச்சாட்டு!!

தமிழ் மக்­கள் பேர­வை­ யு­டன் ஒரு­மித்த கொள்­கை­கள் கொண்ட கட்­சி­கள் சில தமக்­குள் முரண்­பட்­டுள்ள நிலமை
காணப்­ப­டு­கின்­றது. அவற்­றைத் தீர்ப்­பது அந்­தந்­தக் கட்­சி­க­ளுக்­கு­ரிய சவா­லும், பொறுப்­புமே. அந்த முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணம் பொது­ந­லம் என்று எடுத்­துக் காட்­டப்­பட்­டா­லும், கட்சி நலன் கலந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டம் நேற்று பலாலி வீதி­யில் உள்ள பேரவை அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது,

இது­வரை நடந்த தவ­று­களை மறப்­போம். நாம் அனை­வ­ரும் ஒன்­றா­கக் கைகோர்த்­துப் பய­ணிப்­போம். ஆனால் இனி­மேல் தவ­று­கள் இடம்­பெ­றாது இலட்­சி­யத்தை மன­தில் நிறுத்­திச் செயற்­ப­டு­வோம். புதிய பொதுச் சின்­னத்­தின் கீழ் எம்மை ஒன்­றி­ணைக்­கும் பணி­யைத் தமிழ் மக்­கள் பேர­வை­யி­னர் மேற்­கொள்­வர் என்று நம்­பு­கின்­றேன். என்­னைப் பொறுத்­த­வரை மிள­காய்த் தூள் கரை­சலை யார் மீதும் தெளிக்­காது உங்­கள் முடிவை மன­மு­வந்து ஏற்­றுக் கொள்­வேன்.

பொதுச் சின்­னம்
கட்­சி­க­ளின் சின்­னங்­கள் பல காலம் உப­யோ­கிக்­கப்­ப­டும்­போது அவற்­று­டன் அந்­தந்­தக் கட்­சி­க­ளின் மீதுள்ள மதிப்பு, வெறுப்பு, எதிர்­பார்ப்பு போன்­றவை அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. புதி­தா­கக் கொள்கை அடிப்­ப­டை­யில் அர­சி­ய­லில் உள்­நு­ழை­வோர் அந்­தந்­தக் கட்­சி­க­ளின் சின்­னங்­க­ளு­டன் சேர்ந்து தேர்­த­லில் ஈடு­பட்­டால் அல்­லது அவற்­றிக் கீழ் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டால் கட்­சிச் சின்­னங்­கள் மீதுள்ள மக்­க­ளின் நம்­பிக்­கை­க­ளும், அவ­நம்­பிக்­கை­க­ளும் புதிய கட்­சி­யின் மீதும் பதி­யும். சின்­னத்­தைத் தரும் கட்­சி­யின் பொறுப்­புக்­க­ளை­யும், இறந்­த­கால நிகழ்­வு­க­ளை­யும் புதிய கட்சி சுமை தாங்­கிப் பய­ணிக்க வேண்டி வரும்.
கொள்­ளை­க­ளைப் பரப்ப வந்த நாம் கடந்­த­கால கோப­தா­பங்­க­ளுக்கு ஆளாக நேரி­டும். அத­னா­லேயே நாம் ஒரு பொது­வான சின்­னத்­து­டன் அல்­லது புதிய சின்­னத்­து­டன் கொள்­கை­கள் சார்ந்து பய­ணிக்க வேண்­டும் என்று எமது கட்சி தொடர்­பாக அபிப்­பி­ரா­யம் தெரி­வித்­துள்­ளேன்.

உங்­க­ளின் முடிவு
தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான எனது பொறுப்­புக்­கள் மீள் பரி­சீ­லனை செய்­யப்­பட வேண்­டும். நான் தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத்­த­லை­வ­ராக உள்­ள­போதே தமிழ் மக்­கள் கூட்­டணி என்ற அர­சி­யல் கட்­சியை ஆரம்­பித்­துள்­ளேன். அதன் செய­லா­ளர் நாய­க­மா­க­வும் மாறி­யுள்­ளேன். நான் தொடர்ந்து தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத்­த­லை­வ­ரா­கக் கட­மை­யாற்­ற­லாமா என்­பதை உங்­கள் பரி­சீ­ல­னைக்கு விடு­கின்­றேன்.

எமது கட்­சி­யின் அர­சி­யல் குறிக்­கோள்­கள் பேர­வை­யின் அர­சி­யல் குறிக்­கோள்­க­ளு­டன் மாற்­ற­பட்­டல்ல. எமக்­குள் முரண்­பா­டு­கள் எழ வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஆனால் பேர­வை­யில் ஏற்­க­னவே இடம்­பெற்­றுள்ள கட்­சி­க­ளுக்­கும் எமக்­கும் கொள்­கை­ய­ள­வில் மாறு­பா­டு­கள் இருக்­க­லாம்.

உதா­ர­ணத்­துக்கு சித்­தார்த்­த­னின் கட்சி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்தே செய­லாற்­று­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நட­வ­டிக்­கை­களை ஏற்க முடி­யா­த­தா­லேயே நான் அதி­லி­ருந்து வெளி­யே­றி­னேன். சித்­தார்த்­த­னு­டன் எமக்­குக் கொள்­கை­ய­ள­வில் முரண்­பா­டு­கள் இருக்­க­லாம்.

அதைப் போன்று தமிழ்க் கூட்­ட­மைப்­பில் இணைந்­துள்ள ஏனைய கட்­சி­க­ளு­டன் எமக்கு முரண்­பா­டு­கள் எழக் கூடும். ஆனால் தமிழ் மக்­கள் பேர­வை­யு­டன் முரண்­பா­டு­களை எதிர்­நோக்­கக் கார­ணங்­கள் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உத­வி­யு­டன் முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நான் அந்­தப் பதவி முடி­யும்­வரை தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வ­ரா­க­வும் கட­மை­யாற்­றி­யுள்­ளேன். முரண்­பா­டு­கள் எழ­வில்லை. எது எவ்­வாறு இருப்­பி­னும் நான் தொடர்ந்து தமிழ் மக்­கள் பேர­வை­யில் இணைத்­த­லை­வ­ரா­கக் கட­மை­யாற்­ற­லாமா? இல்­லையா என்­பது பற்றி உங்­க­ளா­லேயே தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டும்.

கட்­சி­க­ளின் நலனே
பேர­வை­யில் அங்­கம் வகிக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளின் கடந்­த­கா­லத் தேர்­தல் செயற்­பா­டு­கள் தொடர்­பாக ஆராய வேண்­டி­யுள்­ளது என்று நிகழ்ச்சி நிர­லில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­கள் பேர­வை­யு­டன் ஒரு­மித்த கொள்­கை­கள் கொண்ட கட்­சி­கள் சில தமக்­குள் முரண்­பட்­டுள்ள நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

அவற்­றைத் தீர்ப்­பது அந்­தந்­தக் கட்­சி­க­ளுக்­கு­ரிய சவா­லும், பொறுப்­புமே. அந்த முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணம் பொது­ந­லம் என்று எடுத்­துக் காட்­டப்­பட்­டா­லும், கட்சி நலன் கலந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அத­னால் தமிழ் மக்­கள் பேர­வையோ அல்­லது தமிழ் மக்­கள் கூட்­ட­ணியே அந்­தக் கட்­சி­க­ளின் முரண்­பா­டு­க­ளைத் தமக்­குள் ஈர்க்க வேண்­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது.

அவர்­க­ளின் முரண்­பா­டு­களை மன­தில் வைத்தே எமது கூட்­டணி சுதந்­தி­ர­மா­கப் பொதுச் சின்­னம் ஒன்­றில் கட்சி அர­சி­யல் நுழை­யத் தீர்­மா­னம் எடுத்­தது. ஏனைய கட்­சி­கள் மற்­றும் இயக்­கங்­கள் கொள்கை அடிப்­ப­டை­யில் எம்­மு­டன் தேர்­தல் உடன்­பா­டு­களை வைத்­துக் கொள்­ள­லாம்.

அங்­கத்­து­வக் கட்­சி­க­ளின் முரண்­பா­டு­கள் கொள்கை ரீதி­யா­ன­வையா, கட்சி நலன்­கள் சம்­பந்­தப்­பட்­ட­வையா என்று நாம் பார்க்க வேண்­டும். சில வேளை­க­ளில் கொள்­கை­கள் ஒன்­றாக இருக்க நடை­மு­றைச் செயற்­பா­டு­கள் முரண்­பா­டு­டை­யன என்று ஒரு கட்சி மற்­றைய கட்சி பற்றி விமர்­சிக்­கக்­கூ­டும். அவற்­றைத் தீர்த்து வைக்க தமிழ் மக்­கள் பேரவை முரண்­பா­டு­க­ளி­டையே உள்­நு­ழைய வேண்­டும் என்­ப­தில்லை.

தனிப்­பட்ட ரீதி­யில் பேர­வை­யின் இணைத்­த­லை­வர்­களோ அங்­கத்­த­வர்­களோ அவற்றை நீக்க இரு சாரா­ரா­லும் கோரப்­பட்­டார்­கள் என்­றால் அவற்­றைத் தீர்க்க அவர்­கள் முன்­வ­ர­லாம். உதா­ர­ணத்­துக்கு கஜேந்­தி­ர­கு­மா­ரின் கட்­சிக்­கும் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னின் கட்­சிக்­கும் இடை­யில் எழுந்­துள்ள முரண்­பா­டு­களை நீக்க எமது இணைத்­த­லை­வர் ஒரு­வர் முன்­வ­ர­லாம். ஆனால் அது அந்த இணைத்­த­லை­வ­ரின் தனித்­து­வ­மான அவ­ரின் ஏற்­பு­டைத் தன்­மை­யைப் பொறுத்து ஏற்­கப்­பட்ட கட­மை­யா­கவே இருக்­கும்.

கூட்­ட­ணி­யின் மீது
பக்­கச்­சார்ப்பு கூடாது

இன்று நாம் பரி­சீ­லிக்­கப்­போ­வது அங்­கத்­து­வக் கட்­சி­க­ளின் தேர்­தல் செயற்­பா­டு­கள் பற்­றிய பேர­வை­யின் கொள்­கை­கள் எவ்­வாறு அமைய வேண்­டும் என்­ப­தா­கும். அதனை நீங்­களே தீர்­மா­னிக்க வேண்­டும். தமிழ் மக்­கள் கூட்­டணி தமிழ் மக்­கள் பேர­வை­யில் இருந்து வெளி­வந்த ஒரு கட்சி. பேரவை உரு­வாக்­கும்­போது அன்று நடை­மு­றை­யில் இல்­லாத கட்சி. மற்­றைய கட்­சி­கள் பேர­வையை உரு­வாக்க உதவி புரிந்த கட்­சி­கள்.

இவற்­றுள் வேறு­பாடு காட்ட வேண்­டுமா என்­பது உங்­க­ளைச் சார்ந்­தது. இப்­பொ­ழுது கூடப் பேர­வை­யில் அங்­கம் வகிக்­கும் பலரே கூட்­ட­ணி­யின் செயற்­பா­டு­க­ளுக்­குப் பொறுப்­பாக இருக்­கின்­றார்­கள். உதா­ர­ணத்­துக்­குப் பேரா­சி­ரி­யர் சிவ­நா­த­னைக் குறிப்­பி­ட­லாம்.

நாம் ஒற்­று­மை­யு­ட­னும் பரஸ்­பர நம்­பிக்­கை­யு­ட­னும் கட்சி பேதங்­க­ளைக் கடந்து இது­வரை கால­மும் செயற்­பட்­ட­தன் விளை­வா­கவே தமிழ் மக்­கள் பேர­வையை எமது மக்­கள் நம்­பிக்­கை­யு­ட­னும் எதிர்­பார்ப்­பு­ட­னும் பார்த்து வந்­துள்­ளார்­கள். கடந்த காலங்­க­ளில் எமக்­கி­டையே சில கசப்­பான சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றி­ருக்­க­லாம்.

அவற்­றில் இருந்து பாடம் கற்­றுக்­கொண்டு மீண்­டும் அதே தவ­று­கள் இடம்­பெ­றா­மல் நாம் எவ்­வாறு எமது மக்­க­ளுக்கு சேவை செய்­யப்­போ­கி­றோம், எவ்­வாறு எமது மக்­க­ளின் அர­சி­யல் அபி­லா­சை­களை அடை­யப்­போ­கி­றோம் என்­ப­வற்­றைக் கருத்­தில் கொண்டு கட­மை­யாற்ற வேண்­டிய கால­கட்­டத்­தில் நாம் நிற்­கின்­றோம்.

கூட்­ட­மைப்­பு­டன்
உடன்­பாடு இல்லை
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எமது மக்­க­ளின் பிரச்­சி­னை­யைக் கையாண்ட விதத்­தில் எனக்கு எள்­ள­ள­வும் உடன்­பாடு இருக்­க­வில்லை. அவர்­கள் கொள்கை பிறழ்ந்­தார்­கள் என்று நான் நம்­பி­ய­தால் அவர்­க­ளு­டன் முரண்­பட்டு வெளி­யே­றி­னேன். அதற்­காக இன்­று­வரை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் புளொட் அமைப்­பின் மீதோ அதன் தலை­வர் சித்­தார்த்­தன் மீதோ எனக்கு தனிப்­பட்ட முறை­யில் எந்த வித கோப தாபங்­க­ளும் இல்லை.

அர­சி­ய­லில் நண்­பர் சித்­தார்த்­த­னின் அணு­கு­முறை வேறாக இருக்­க­லாம். ஆனால் அவர் எனது நண்­பர். என் மதிப்­புக்­கு­ரிய ஒரு­வ­ரின் மகன். அவ­ரு­டன் இணைந்து பல வேலை­களை தமிழ் மக்­கள் பேர­வை­யில் நாம் எல்­லோ­ரும் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றோம். அவ­ரைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இருந்து பிரித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைக் கட்சி ரீதி­யாக கூறு போடும் வேலையை நான் செய்­ய­மாட்­டேன்.

அதே­வேளை, கொள்கை ரீதி­யில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பு­டன் முரண்­பட்டு வெளி­யே­றிய கட்­சி­கள் இங்கு இருக்­கின்­றன. அவர்­க­ளு­டன் கொள்கை அடிப்­ப­டை­யில் ஒற்­று­மை­யாக இணைந்து அர­சி­ய­லில் செயற்­ப­டு­வதே எனது விருப்­பம்.

அனை­வ­ரும்
இணை­யுங்­கள்
மாற்­றுத் தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கக் காலம் கனிந்­துள்­ளது. தமிழ் தேசி­யத்தை வலி­யு­றுத்­தும் கட்­சி­க­ளு­டன் நாம் ஒன்­று­பட்டு பய­ணிக்க வேண்­டிய கடப்­பாடு எமக்­குண்டு. நான் எந்­தக் கட்­சிக்­கும் பக்க சார்­பாக நின்று அவர்­க­ளின் சின்­னத்­தில் தேர்­தல்­க­ளில் போட்­டி­யிட முடி­யாது. ஒரு புதிய பொதுச் சின்­னத்­தின் கீழ் தமிழ்த் தேசி­யத்­தின்­பால் பற்­றுதி உள்ள எல்­லோ­ரை­யும் ஒன்­றி­ணைக்­கும் வகை­யில் தமிழ் மக்­கள் கூட்­ட­ணி­யின் கீழ் போட்­டி­யிட தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு வெளியே நிற்­கும் ஈ.பி.டி.பி. தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்­சி­களை அழைக்­கி­றேன்.

ஒற்­றுமை என்ற கார­ணத்­துக்­காக தவ­று­க­ளைக் கண்­டும் காணாது இருந்­து­விட முடி­யாது. எமது பய­ணத்­தில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­ப­டும் தவ­று­க­ளுக்கு நாம் இடம்­கொ­டுக்க முடி­யாது. நான் தவறு விட்­டால் அத­னைச் சுட்­டிக்­காட்டி தக்க நட­வ­டிக்கை எடுக்­கும் கடமை உங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இருக்­கின்­றது.