பிரதமர் பதவி வகிக்க பெரும்பான்மையை உறுதிப்படுத்தவும் – காமினி ஜயவிக்ரம

நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று தற்போதில்லை. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிப்பதற்தாக இருந்தால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

 

அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதில் நாட்டு மக்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. தமது வாக்குரிமையை சிறந்த தலைவன் ஒருவனுக்கு பிரயோகிப்பதும் வாக்களர்களின் கடமையாக காணப்படுகின்றது.  தேவையற்ற தகைமைகளை காரணங்காட்டி பிரதிநிதிகளை தெரிவு செய்யாமல்  பிரதிநிதியின் கொள்கைகள் அவரின் கல்வி தகைமைகள் மாத்திரமன்றி நாட்டுக்காக முறையான சேவைகளை வழங்க கூடியவரா என ஆராய்ந்தே வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். வாக்குகளை முறையாக பயன்படு;திதனால் மாத்திரமே நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும்.